கனிமொழி எம்.பி பிப்.6ல் குமரியில் சுற்றுப்பயணம்
திமுக., எம்.பி., கனிமொழி நாளை குமரியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
Update: 2024-02-05 07:55 GMT
. கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் நாளை Iபிப்ரவரி 6ம்) தேதி கனிமொழி எம்.பி தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். இந்த குழுவினர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொள்கின்றனர். இதில் தொழில்துறையினர், கல்வியாளர்கள், மீனவர்கள், சிறுகுறு தொழில் முனைவோர், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர் சங்கங்கள், சூழலியலாளர்கள், மருத்துவர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் நேரடியாக சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை பெற உள்ளனர்.