கண்ணதாசன் பிறந்தநாள் விழா - அரசு அலுவலர்கள் மரியாதை
காரைக்குடியில் கண்ணதாசன் பிறந்தநாளை முன்னிட்டு அரசு அலுவலர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்;
Update: 2024-06-26 15:52 GMT
காரைக்குடியில் கண்ணதாசன் பிறந்தநாளை முன்னிட்டு அரசு அலுவலர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
கவியரசர் கண்ணதாசனின் 98 வது பிறந்த தினத்தை முன்னிட்டு காரைக்குடியில் உள்ள கண்ணதாசன் மணி மண்டபத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தேவகோட்டை கோட்டாட்சியர் பால்துரை. காரைக்குடி வட்டாட்சியர் தங்கமணி, கவிஞர் கண்ணதாசனின் ,மகள் விசாலாட்சி பழனியப்பன், காரைக்குடி திமுக நகர செயலாளர் குணசேகரன் டாக்டர்கள் சுரேந்திரன், செல்வகுமார், கவிஞர் அரு.நாகப்பன். மக்கள் தொடர்பு அலுவலர் ராஜ செல்வம் மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்