கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதல்

விடுமுறை தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

Update: 2024-06-23 12:28 GMT

கன்னியாகுமரி 

கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு ஏப்ரல் மே மாதங்களில் கோடை விடுமுறை, சபரிமலை சீசன் களை கட்டும். பொதுவாக சீசன் காலத்தை தவிர்த்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பண்டிகை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் வருவது வழக்கம்.      

இந்த வகையில் நேற்று சனிக்கிழமை மற்றும் இன்று  ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமானதால் சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் கன்னியாகுமரி களை கட்டியது. பயணிகள் முக்கடலும்  சங்கமிக்கும் திருவேணி சங்கமம், சங்கிலித் துறை கடற்கரை பகுதிகளில் அதிகாலையிலே சூரியன் உதயமாகும்  கட்சியை கண்டு ரசித்தனர்.

முக்கடல் சங்கமத்தில் ஆனந்த குளியல் இட்டு பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News