இனி அரசுப்பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வி 

ஆங்கில வழி பயிலும் மாணவர்களை முழுமையாக பணியிட நிர்ணயத்தில் கணக்கிட்டு பணியிட நிர்ணய ஆணை வழங்கிட வேண்டும் என கோரிக்கை.

Update: 2024-03-07 12:11 GMT

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் ஜான் உபால்ட் முதலமைச்சருக்கு அனுப்பி உள்ள மனுவில், “நூறு விழுக்காடு கல்வி அறிவு பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பள்ளிகள் முழுவதிலும் ஆங்கில வழி கல்வி உருவாக்கப்பட்ட நிலையில், குமரி மாவட்டத்தில் உள்ள பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஆங்கில வழி கல்வி படிக்க வைக்க விரும்புகின்றனர்.      

இதனால் தமிழ் வழி கல்விக்கு மாணவர்கள் பற்றாக்குறை நிலை  உள்ளது.  எனவே குமரி மாவட்டத்தினை சிறப்பு கவனம்  செலுத்தி தனி தொகுதியாக கருதி அரசு உதவி பெறும் சிறுபான்மை மற்றும் அரசு உதவி பெறும் ஏனைய பள்ளிகளுக்கும் ஆங்கில வழி கல்வி அனுமதி அளிக்க வேண்டும்.      

ஆங்கில வழி பயிலும் மாணவர்களை முழுமையாக பணியிட நிர்ணயத்தில் கணக்கிட்டு பணியிட நிர்ணய ஆணை வழங்கிட வேண்டும். இதனால் குமரி மாவட்டத்தில் உபரி ஆசிரியர்கள் பணியிடம் பெரும் அளவு குறையும்.   

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி மாணவர்களை கணக்கிட்டு பணியிட நிர்ணய ஆணை வழங்கிய பின்னர் ஏனைய உபரி ஆசிரியர்களுக்கு மாற்று பணியிடம் வழங்க வேண்டும்” என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News