காணும் பொங்கல் : தரங்கம்பாடி கடற்கரையில் குவிந்த பொதுமக்கள்
காணும் பொங்கலை முன்னிட்டு ஓசோன் செறிவு மண்டலமான தரங்கம்பாடி கடற்கரையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலா தலமான தரங்கம்பாடி கடற்கரை நகரம் உள்ளது. மாசிலாமணிநாதர் கோவில் கடற்கரையையொட்டி அமைந்துள்ளது. இந்தியாவில் ஓசோன் காற்று அதிகம் வீசும் கடற்கரை நகரமாக விளங்குகிறது. ஏப்ரல், மே, ஜுன், ஜுலை மாதங்களில் அதிகமாக காற்று வீசுகிறது. 1620ஆம் ஆண்டில் கட்டப்பட்ட வரலாற்ற சிறப்பமிக்க டேனிஷ் கோட்டை உள்ளது. இங்கு கீழ்தளத்தில் கிடங்குகள், வீரர்கள் தங்கிய அரைகள், மேல்தளத்தில் தொல்லியல் துறையின் பழங்கால பொருட்கள் அடங்கிய அருங்காட்சியகம் உள்ளது.
வரலாற்று சிறப்பு மிக்க தரங்கம்பாடி கடற்கரை நகரத்திற்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் காணும் பொங்கலை முன்னிட்டு தரங்கம்பாடி கடற்கரையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். டேனிஷ் கோட்டை, அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை குடும்பதினருடன் சுற்றிபார்த்து . கடலில் சிறுவர்கள் பயமறியாமல் உற்சாகமாக குளித்து விளையாடி மகிழ்ந்தனர். பாதுகாப்பு பணியில் தரங்கம்பாடி கடலோர காவல் நிலைய போலீசார் ஈடுபட்டு தடையை மீறி கடலில் குளித்த சிறுவர்கள் சிறுமியர்கள் பெண்கள் உள்ளிட்ட சுற்றுலா பயணிகளை வீசில் ஊதி கரையேற்றினர்.