சாமி தரிசனம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளர்

சிவகங்கையில் சாமி தரிசனம் செய்து கார்த்தி சிதம்பரம் எம்பி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Update: 2024-04-02 04:07 GMT

சிவகங்கையில் சாமி தரிசனம் செய்து கார்த்தி சிதம்பரம் எம்பி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்


தமிழகம் முழுவதும் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், சிவகங்கை பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கார்த்தி சிதம்பரம் இன்று சிவகங்கை நகரில் பரப்புரை மேற்கொண்டார்.

முன்னதாக, சிவகங்கை பேருந்து நிலையம் அருகே உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்பு பேருந்து நிலையப் பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்ட், அரசு போக்குவரத்து பணிமனை உட்பட பல பகுதிகளில் மக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார்.

Tags:    

Similar News