கார்த்திகை தீபத்திருவிழா : மோட்டார் வாகன ஆய்வாளர் திடீர் சோதனை
திருவண்ணாமலையில் உரிய ஆவணங்கள், உரிமம் இல்லாமல் இயக்கப்பட்டு வந்த 6 ஆட்டோக்களைவட்டார போக்குவரத்து மோட்டார் வாகன முதுநிலை ஆய்வாளர் பெரியசாமி பறிமுதல் செய்தார்.
Update: 2023-11-23 07:52 GMT
திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வழிகாட்டுதலின்பேரில் தீபத்திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு தேவையான வசதிகள் அனைத்து துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் போக்குவரத்து துறைசார்பில் தீபத்திருவிழாவுக்கு ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயித்து உள்ளனர். மேலும் ஆட்டோக்களுக்கு உரிய ஆவணங்கள் வைத்திருக்கவேண்டும், வெளி மாவட்ட ஆட்டோக்கள் இயக்க அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று திருவண்ணாமலை நகரில் மோட்டார் வாகன ஆய்வாளர் பெரியசாமி வாகன சோதனையில் ஈடுபட்டார்..அப்போது, ஆவணங்கள் இல்லாமல் இயங்கி வந்த 5 ஆட்டோக்கள் , வெளி மாவட்ட ஆட்டோ ஒன்று என மொத்தம் 6 ஆட்டோக்களை பறிமுதல் செய்தார்.