குமரியில் திமுக சார்பில் கருணாநிதி 101-வது பிறந்தநாள் கொண்டாட்டம்  !

தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101 வது பிறந்த நாள் விழா கன்னியாகுமரி மாவட்ட திமுக சார்பில் இன்று கொண்டாடப்பட்டது.

Update: 2024-06-03 11:13 GMT

திமுக

தமிழக  முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101 வது பிறந்த நாள் விழா கன்னியாகுமரி மாவட்ட திமுக சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. நாகர்கோவில் ஒழுகினனசேரியில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் குமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமை வகித்தார்.

தொடர்ந்து அவர் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மலர்  தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் கட்சி அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து கட்சி நிர்வாகிக்கும் பொது மக்களுக்கும்  இனிப்பு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள்  அமைச்சர் சுரேஷ் ராஜன், மாவட்ட பொருளாளர் கேட்சன், முன்னாள் எம்எல்ஏ ராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர் தாமரை பாரதி, அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் மற்றும் ஒன்றிய செயலாளர் உட்பட ஏராளம் பேர் கலந்து கொண்டனர். குமரியில்  இன்று மாவட்டம் முழுவதும் கருணாநிதியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

Tags:    

Similar News