பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழப்பு.

மது போதையால் பறிபோன உயிர் - போலீசார் விசாரணை;

Update: 2024-02-20 13:07 GMT

பேருந்து நிலையத்தில் மது போதைக்கு அடிமையானவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை, மதுரை சாலை பகுதியைச் சேர்ந்தவர் சின்னையா மகன் சேவர்கொடியான். இவர் மது போதைக்கு அடிமையானதால், உடல் நலம் குன்றி வாழ்ந்து வந்தார். இந்நிலையில் பிப்ரவரி 18ஆம் தேதி மாலை 4 மணி அளவில் கரூர் பேருந்து நிலையத்திற்கு வந்த சேவர்கொடியான் அப்பகுதியில் உள்ள பொதுக் கழிப்பிடம் அருகே சென்றபோது, மயங்கி கீழே விழுந்தார்.

உடனடியாக அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அவருக்கு முதலுதவி அளித்தனர். ஆயினும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த சேவர்கொடியானின் சகோதரர் சங்கர் கணேஷ் என்பவர், இது குறித்து கரூர் காவல் துறையினருக்கு அளித்தார். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்த சேவர்கொடியான் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக  கரூர் மாநகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

Similar News