காசி விஸ்வநாதர் கோயிலை புனரமைக்கணும் !
ஆதனக்கோட்டையிலுள்ள பழைமையான காசி விஸ்வநாதர் கோயிலை புனரமைக்குமாறு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
Update: 2024-06-20 05:14 GMT
ஆதனக்கோட்டையிலுள்ள பழைமையான காசி விஸ்வநாதர் கோயிலை புனரமைக்குமாறு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டையிலுள்ள பழைமையான காசி விஸ்வநாதர் கோயிலை புனரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆதனக்கோட்டை ஊராட்சியில் சுமார் 300 ஆண்டுகள் பழைமையான காசி விஸ்வநாதர் உடனுறை விசாலாட்சி அம்மன் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயில் தற்போது மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. காசியில் வழிபாடு செய்தால் என்ன புண்ணியமோ அதே புண்ணியம் இக்கோயிலில் வழிபாடு செய்தால் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்தகைய சிறப்புடைய இக்கோயிலை இந்து சமய அறநிலையத் துறையினர் விரைந்து புனரமைத்து, குடமுழுக்கு நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.