காசிநாதபுரம் தார்ச்சாலை ஜல்லி சாலையாக மாறிய அவலம்

Update: 2023-12-25 07:34 GMT

ஜல்லி சாலையாக மாறிய அவலம்

திருத்தணி ஒன்றியம் பட்டாபிராமபுரம் ஊராட்சி, காசிநாதபுரம் புதிய காலனி பகுதியில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். திருத்தணி—நாகலாபுரம் மாநில நெடுஞ்சாலையில் இருந்து காசிநாதபுரம் புதிய காலனிக்கு செல்வதற்கு, ஒன்றரை கிலோ மீட்டர் துாரம் கடந்த, 2014- 15ம் ஆண்டு ஊராட்சி நிர்வாகம், 2 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச் சாலை அமைத்தது. இந்நிலையில், தார்ச்சாலையை முறையாக பராமரிக்காததால், தற்போது ஜல்லிகற்களாக மாறியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்கள் தவறி விழுந்து படுகாயம் அடைகின்றனர். பழுதடைந்த தார்ச்சாலையை சீரமைக்க வேண்டும் என புதிய காலனி பகுதியினர் பலமுறை ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் சாலை சீரமைக்க உத்தரவிட வேண்டும் என அப்பகுதியினர் எதிர்பார்கின்றனர்.
Tags:    

Similar News