அஞ்சுவட்டத்தமன் கோவில் பங்குனி தேர்திருவிழா

கீழ்வேளூர் அட்சயலிங்க சுவாமி கோயிலில் உள்ள அஞ்சுவட்டத்தமன் சுவாமி பங்குனிப் பெருவிழா வல்லாங்குளத்து முத்துமாரியம்மன் உற்சவம், அழகிய மணவாள ஜயனார் உற்சவத்துடன் தொடங்கியது.;

Update: 2024-04-10 07:13 GMT

தேரோட்டம் 

 முருகன் சுரனை வதம் செய்ய நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலில் சிங்காரவேலவர் கோயில் வேல்நெடுஞ்கண்ணியிடம் வேல் வாங்கி திருச்செந்தூரில் சுரனை வதம் செய்து அதன் கொலை பாவம் தீர முருகன் கீழ்வேளூர் அட்சயலிங்க சுவாமி கோயில் முன் உள்ள சரவண பொய்கை திருக்குளத்தில் குளித்து அட்சயலிங்க சுவாமியை நோக்கி தவம் இருந்த போது தீய சக்திகளால் முருகனின் தவம் கலையாத வகையில் காளியம்மன் நான்கு திசை மற்றும் ஆகாயம் என ஐந்து திசையிலும் காவல் காத்ததால் அஞ்சுவட்டத்தன் என பெயர் பெற்றது.

Advertisement

இந்த அஞ்சுவட்டத்தமன் பங்குனி திருவிழா கடந்த மார்ச் 31ம் தேதி வல்லாங்குளத்து முத்து மாரியம்மன் உற்சவம், கடந்த 1ம் தேதி அழகிய மணவவாள ஐயனார் உற்சவத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து தினம் தோறும் இரவு அஞ்சுவட்டத்தமன் பல்வேறு வாகனத்தில் வீதி உலா காட்சி நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா நேற்று காலை நடைபெற்றது. நேற்று முந்தினம் இரவு கோயிலில் இருந்து அஞ்சுவட்டத்ததமன் தேருக்கு எழுத்தருளினார்.

அதைத் தொடர்ந்து நேற்று காலை தேர் திருவிழா நடைபெற்றது. காலை 7.15 மணிக்கு தேரடியில் இருந்து புறப்பட்ட தேரை ஏராளமான பக்த்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் வடக்கு வீதியில் உள்ள அஞ்சுவட்டத்தமன் தேரடியில் இருந்து புறப்பட்ட தேர் கீழ வீதி, தெற்கு வீதி, மேல விதி வழியாக மீண்டும் தேரடியைவந்து சேர்ந்தது. வரும் 12ம் தேதி விடையாற்றியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், கிராமவாசிகள், உபயதாரர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News