கெஜல் நாயக்கன்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஐம்பெரும் விழா !
கெஜல் நாயக்கன்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 50வது ஆண்டு விழா நடைபெற்றது.
By : King 24x7 Angel
Update: 2024-02-23 11:10 GMT
திருப்பத்தூர் மாவட்டம் கெஜல் நாயக்கன்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஐம்பெரும் விழா 50வது ஆண்டு விழாவில் பெருந்தலைவர் காமராஜரை மற்றும் வெங்கட்டப்பன் நாயுடு சிலை திறப்பு விழா நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி பகுதியை சேர்ந்த வெங்கடப்ப நாயுடு கடந்த 64 வருடங்களுக்கு முன்பு தனக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் முன்னிலையில் கல்விக்காக இலவசமாக கொடுத்தார். அப்போதைய முதல்வர் காமராஜ் அவர்கள் அடிக்கல் நாட்டி பள்ளிக்கூடம் கட்டப்பட்டது அதுமட்டுமின்றி தற்பொழுது செயல்பட்டு வரும் கந்திலி காவல் நிலையம் இவர் இலவசமாக கொடுத்த இடமாகும் அதேபோல் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகளும் செய்து வந்துள்ளார், வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுத்தார், வீட்டு கட்டுவதற்கு வீடு கட்ட இடம் கொடுத்துள்ளார் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வந்துள்ளார். இவரது நினைவாக அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று 50 ஆண்டு விழாவில் காமராஜ் மற்றும் வெங்கடப நாயுடுக்கு வெண்கல திருவுருவ சிலை அமைத்து ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் பங்கேற்ற பல்வேறு வேடங்கள் அணிந்து நடித்துக் காட்டியுள்ளனர். அதேபோல் பாட்டு போட்டி கட்டுரை போட்டி உள்ளிட்டு போட்டிகளில் பங்கேற்று தங்களது திறமைகளை வழிக்காட்டிய மாணவர்களுக்கு ஊக்கு விக்கும் விதமாக நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. அதேபோல் பள்ளி ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் மூலிகைத் தோட்டம் திறக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் பள்ளி மேலாண்மை குழு, முன்னாள் மாணவர்கள் சங்கம் ஆசிரியர்கள் அலுவலக உறுப்பினர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.