கெங்கையம்மன் கோவிலில் சிரசு திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சி!

குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் சிரசு திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2024-05-01 12:35 GMT

 குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் சிரசு திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.  

குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் நடைபெறும் சிரசு திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. திருவிழாவை காணவும், சாமி தரிசனம் செய்யவும் ஏராளமான பக்தர்கள் குடியாத்தம் வருவார்கள். இந்த ஆண்டு கெங்கையம்மன் சிரசு விழாவை முன்னிட்டு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நள்ளிரவு நடந்தது. குடியாத்தம் ராபின்சன் குளக்கரை பகுதியில் அலங்கரிக்கப்பட்ட பூங்கரகம் ஊர்வலம் தொடங்கியது. தொடர்ந்து முத்தாலம்மன் கோவில் சென்று அங்கிருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் ஊர்வலமாக வந்து அதிகாலை கோவிலை அடைந்தது. சுமார் 3 மணிநேரம் மக்கள் வெள்ளத்தில் பூங்கரகம் மிதந்து வந்தது.

கோவில் வளாகத்தை சுற்றி வந்து மூலவர் சன்னதியை அடைந்தது. காப்பு கட்டும் நிகழ்ச்சியை முன்னிட்டு விடியவிடிய வாணவேடிக்கை நடைபெற்றது. காப்புகட்டும் நிகழ்ச்சியை தொடர்ந்து குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மாவிளக்கு ஏந்தியும், கூழ் ஊற்றியும் கெங்கையம்மன் கோவிலுக்கு குடும்பத்துடன் வந்து வழிபட்டு செல்கின்றனர்

Tags:    

Similar News