கேரளா குமரி மீனவர்கள் 80 பேர் சிறைப் பிடிப்பு!
தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் தொழில் செய்யும் பகுதியில் அத்துமீறி நுழைந்து தொழில் செய்ததாக கேரள மாநில விசைப்படகு மற்றும் ஐந்து குளச்சல் பகுதியைச் சேர்ந்த விசைப்படகு மற்றும் 80 மீனவர்களை நடுக்கடலில் சிறை பிடிப்பு!
By : King News 24x7
Update: 2024-03-20 03:45 GMT
தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 280 விசை படகுகள் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன இந்த படகுகள் காலை 5 மணிக்கு கடலுக்குச் சென்று இரவு 9 மணிக்கு கரை திரும்ப வேண்டும் இதன் காரணமாக அதிகாலையில் கடலுக்கு செல்லும் விசைப்படகு மீனவர்களுக்கு கடந்த ஆறு மாதங்களாக தொழிலில்லாமல் குறைவான அளவு படகுகளை கடலுக்குச் சென்றன இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது இந்நிலையில் தூத்துக்குடி மீனவர்கள் தொழில் செய்யும் கடல் பகுதிகளில் இரவு நேரங்களில் கேரள மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் வந்து மீன்பிடி தொழில் செய்துவிட்டு மீன்களைப் பிடித்து செல்வதால் காலையில் மீன்பிடிக்க செல்லும் தூத்துக்குடி விசைப்படகு மீனவர்களுக்கு மீன்கள் கிடைக்காமல் தொழில் நஷ்டம் ஏற்பட்டது இதை அடுத்து நேற்று முதல் இந்த விஷயத்தில் மீன்வளத்துறை மற்றும் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் நேற்று விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில் இரவு நேரத்தில் தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் தூத்துக்குடி மீனவர்கள் தொழில் செய்யும் கடல் பகுதியில் நுழைந்து மீன் பிடிக்கும் மீனவர்களை சிறை பிடிப்பதற்காக ஆல் கடல் பகுதிக்கு சென்றுள்ளனர் அப்போது அந்த பகுதியில் இழுவை மடியை வைத்து மீன் பிடித்துக் கொண்டிருந்த கேரள மாநில பதிவு என் கொண்ட ஒரு விசைப்படகு மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த ஐந்து விசைப்படகுகளையும் அதிலிருந்த 80 மீனவர்களையும் சிறை பிடித்து தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்திற்கு இன்று அதிகாலை கொண்டு வந்தனர் சிறைபிடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் இரண்டு மீனவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது இதைத்தொடர்ந்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் இந்நிலையில் சிறைபிடிக்கப்பட்ட ஆறு படகுகளில் பிடிக்கப்பட்ட மீன்களை தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் இது குறித்து கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுக சங்கத்திற்கும் மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர் தூத்துக்குடி மீனவர்கள் தொழில் செய்யும் கடல் பகுதியில் தொழில் செய்த கேரள மாநில விசைப்படகு மற்றும் ஐந்து குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை சேர்ந்த விசைப்படகுகள் 80 மீனவர்களுடன் நடுக்கடலில் சிறைபிடித்து கொண்டுவரப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது