கேரள காவல்துறையினர் கற்பூர ஆழி ஊர்வலம்
சபரிமலையில் வருடாவருடம் நடைபெறும் கேரள காவல்துறையினர் கற்பூர ஆழி ஊர்வலம் இந்தாண்டும் விமர்சையாக நடைபெற்றது;
Update: 2023-12-23 11:52 GMT
கேரள காவல்துறையினர் கற்பூர ஆழி ஊர்வலம்
சபரிமலையில் வரும் டிசம்பர் 27ம் தேதி மண்டல பூஜை நடக்கிறது. மண்டல பூஜையை வரவேற்கும் பொருட்டு சபரிமலை சன்னிதானத்தில் பணியாற்றும் போலீஸாரின் "கற்பூர ஆழி" ஊர்வலம் வருடா வருடம் நடைபெறுவது வழக்கும் . வழக்கம் போல இந்த ஆண்டும் வெள்ளிக்கிழமை (22.12.23) மேள தாளங்கள் முழங்க நடந்தது. சபரிமலை கொடிமரத்தின் கீழ், கோயில் தந்திரி கண்டரரு மகேஸ் மோகனரு மற்றும் மேல்சாந்தி மகேஸ் நம்பூதிரி இணைந்து கற்பூர ஆழிக்கு தீபம் பகர்ந்து "ஆழி" ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். புலிமேல் வரும் ஐப்பபன், துவங்கி அனுமர், பார்வதி, பரமசிவன் என கடவுள் வேடமணிந்தவர்களின் நடனங்கள் காண்போரைக் கவர்ந்தன. ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் ஊர்வலத்தை கண்டு ரசித்து மகிழ்ந்ததோடு பக்தி பரவசமடைந்தனர். சபரிமலை சன்னிதானத்தில் இருந்து புறப்பட்ட "கற்பூர ஆழி" ஊர்வலம் மாளிகபுரம் கோயிலை அடைந்து பின் மீண்டும் சபரிமலை சன்னிதானம் வந்து பதினெட்டாம் படிக்கு கீழ் நிறைவடைந்தது.