சிறுமியை கடத்திச் சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

திண்டுக்கல் அருகே 13 வயது சிறுமியை கடத்திச் சென்ற வாலிபரை போக்சோ சட்டத்தில் சாணார்பட்டி மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.;

Update: 2024-04-29 10:11 GMT

பைல் படம்

திண்டுக்கல் அருகேயுள்ள உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி மாயமானார். இதுகுறித்து சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.இந்த நிலையில் சிறுமி கடத்தி செல்லப்பட்டு இருப்பது தெரியவந்தது. திண்டுக்கல் சிறுமலை ஊராட்சிக்கு உட்பட்ட தென்மலையைச் சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 22) என்பவர் சிறுமியுடன் பழகி உள்ளார்.

Advertisement

அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றுள்ளார்.பின்னர் ஒரு அறையில் சிறுமியை தங்க வைத்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முருகேஸ்வரி தலைமையிலான போலீஸார் 2 பேரையும் சாணார்பட்டி போலீஸ் நிலையத்திற்கு சனிக்கிழமை அழைத்து வந்தனர். பின்னர் லட்சுமணன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News