குமரியில் கடத்ப்பட்ட சிறுமி 12மணி நேரத்தில் மீட்பு
குமரியில் கடத்ப்பட்ட சிறுமி 12மணி நேரத்தில் மீட்கப்பட்டார்.
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி கடற்கரையில் ஏராளமான மக்கள் வெளிமாநிலங்களில் இருந்து வந்த்து சாலையில் தங்கி ஊசி, பாசி, சங்கு போன்றவை சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சரஸ்வதி என்பவருடைய மகள் சங்கீதா(வயது 7) நேற்று இரவு 8 மணியளவில் காணாமல்போனதாக போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விசாரணை கன்னியாகுமரி போலீசார் விசாரணை மேற்கொண்டுவந்தனர். முதற்கட்டமாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது சிறுமியிடம் ஒரு மர்ம நபர் வெகு நேரமாக பேசிக்கொண்டிருப்பதும், பின்னர் வாலிபருடன் சிறுமி சென்றதும் சிசிடிவியில் பதிவாகியிருந்தது. வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் சிறுமியை, வாலிபர் கடத்தியிருக்கலாம் என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து போலீசார் அந்த வாலிபரை தேடி வந்தனர்.
இந்நிலையில் கடத்தப்பட்ட சிறுமி கேரளா மாநிலம் நெய்யாற்றங்கரை பேருந்து நிலையத்தில் விட்டுச் செல்லப்பட்டது தெரிய வந்தது. போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து நெய்யாற்றங்கரை பேருந்து நிலையத்தில் இருந்த சிறுமி போலீசாரால் மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட சிறுமியை கன்னியாகுமரிக்கு போலீசார் அழைத்து வந்தனர். கடத்தப்பட்ட 7 வயது சிறுமியை 12 மணி நேரத்தில் தனிப்படை போலீசார் மீட்டனர்.
சிறுமி பணத்திற்காக கடத்தப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் நோக்கத்திற்காக சிறுமி கடத்தப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியை கடத்திய நபரை தனிப்படை போலீசார் கேரளாவிலும் தேடி வருகின்றனர்.