ஆர்.கே.பேட்டையில் சிறுமியை கடத்தியவர் ‛'போக்சோ'வில் கைது
ஆர்.கே.பேட்டையில் சிறுமியை கடத்தியவர் ‛'போக்சோ'வில் கைது செய்யப்பட்டார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-27 10:40 GMT
கைது செய்யப்பட்ட வாலிபர்
ஆர்.கே.பேட்டை காவல் எல்லைக்கு உட்பட்ட கிராமத்தில், கடந்த 16ம் தேதி 16 வயது சிறுமி காணாமல் போனார். இதுகுறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பம் காலனியைச் சேர்ந்த ராஜ்குமார், 34, என்பவர் சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது. இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். ஆர்.கே.பேட்டை போலீசார் நேற்று ராஜ்குமாரை கைது செய்தனர்.
போலீசார் விசாரணையில், சிறுமியை கடத்தி சென்று பாலியல் ரீதியில் துன்புறுத்தியது தெரியவந்தது. இதை தொடர்ந்து, ராஜ்குமாரை, 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.