கல்லூரி மாணவி கடத்தல் - இருதரப்பு மோதலில் 3 பேர் மீது வழக்கு!

திருப்பத்தூர் அடுத்த சாமுடி வட்டம் பகுதியில் கல்லூரி மாணவி கடத்தல் சம்பவத்தால் மோதலில் ஈடுபட்ட இரு குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2024-06-07 06:25 GMT

பைல் படம் 

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் சாமுடி வட்டம் பகுதி சேர்ந்தவர் மணிவாசகம் என்பவரின் மனைவி முனீஸ்வரி (40). இவருக்கு ஜெகப்பிரியா 20 என்ற மகள் உள்ளார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில் உள்ள மகளிர் கல்லூரியில் படித்து வந்தார். அப்போது மேல் அச்சமங்கலம் காளி வட்டம் பகுதியை சேர்ந்த துரைசாமி என்பவரின் மகள் இந்து (20) என்பவரும் அதே கல்லூரியில் பயின்றதால் இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். இதனால் ஜகப்பிரியா இந்துவின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.

இதனால் இந்துவின் சகோதரர் தீபக் (25) என்பவருக்கும் ஜெகப்பிரியாவுக்கும் அறிமுகம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இதனை ஜெகப்பிரியாவின் பெற்றோர்கள் கண்டித்து வந்தனர். இந்நிலையில் நேற்று தீபக் என்பவர் ஜெகபிரியாவின் வீட்டிற்கு சென்று கட்டாயப்படுத்தி கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் முனீஸ்வரி மற்றும் இவரது மகன் விநாயகமூர்த்தி (22) இருவரும் லட்சுமி வீட்டிற்கு சென்று இதுகுறித்து கேட்டுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஆத்திரமடைந்த முனீஸ்வரி மற்றும் விநாயகமூர்த்தி இருவரும் லட்சுமியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

பின்னர் எனது மகள் வரும் வரை உனது மகள் இந்துவை எங்கள் வீட்டிற்கு அழைத்து செல்கிறோம் என கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் இது குறித்து முனீஸ்வரி தனது மகளை தீபக் என்பவர் கடத்திச் சென்றதாக ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் தீபக் மீதும், லட்சுமி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தகாத வார்த்தைகளால் திட்டி அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக முனீஸ்வரி மற்றும் இவரது மகன் விநாயகமூர்த்தி ஆகிய இருவர் என மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News