கிள்ளியூர் ஒன்றிய திமுக பூத் முகவர்கள் கூட்டம்

Update: 2023-11-13 06:28 GMT

வாக்கு சாவடி முகவர்கள் கூட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
குமரி மாவட்டம் கிள்ளியூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில்  குறும்பனை மீனவர் கிராமம் முதல்  ராமன்துறை வரையிலான பூத் முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. பாலூரில் உள்ள அமைச்சர் மனோ தங்கராஜ் முகாம் அலுவலகத்தில்  நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு  ஒன்றிய செயலாளர்  கோபால் தலைமை வகித்தார். ஒன்றிய பொருளாளர் தங்கத்துரை, ஒன்றிய கவுன்சிலர் தேவதாஸ், தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அபிஷன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட அவைத்தலைவர் மரியசிசு குமார் கலந்துகொண்டு முகவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.  கூட்டத்தில் குறும்பனை முதல் ராமன்துறை வரையிலான பூத் முகவர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டு அறிய தீர்மானிக்கப்பட்டது.  மேலும் பூத் முகவர்களுடன் சென்று வாக்காளர்களை சந்திப்பது, தேர்தலுக்கான அனைத்து பணிகளையும் உடனடியாக ஒருங்கிணைந்து செயல்படுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஜீன்,பெதலிஸ், லயோலியன், ஜோசப்பாத், சீலன், லீலா, ஆண்டனி, பெர்சலின் உட்பட பலர் கலந்து கொண்டனர்
Tags:    

Similar News