காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் கிருத்திகை சிறப்பு வழிபாடு

காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் மார்கழி மாத கிருத்திகையும் முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது

Update: 2023-12-24 12:54 GMT
காளிப்பட்டி கந்தசாமி முருகன் கிருத்திகை சிறப்பு பூஜையில் வள்ளி, தெய்வாணையுடன் அருள் பாலித்தார்.
சேலம்– நாமக்கல் மாவட்ட எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் நேற்று, மார்கழிமாத கிருத்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு, காலை 6மணிமுதல் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பலவகையான மூலிகை திரவியங்களை கொண்டு மூலவருக்கு அபிசேகம் செய்யப்பட்டது. பலவகையான வண்ண மலர்களால் கோவில் உட்பிரகாரம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. உட்பிரகாரத்தில் வள்ளி, தெய்வாணையுடன் முருகன் சிறப்பு தோற்றத்தில் அருள்பாலித்தார். நேற்று, விடுமுறை தினம் என்பதால், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். சேலம், கரூர், ஈரோடு என பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News