கே.ஜே.எஸ். ஜூவல்லரியில் புதிய டிசைன்களில் பளபளக்கும் நகைகள் அறிமுகம்
சேலம் கே.ஜே.எஸ். ஜூவல்லரியில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில், புதிய டிசைன்களில் பளபளக்கும் நகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
சேலம் 5 ரோடு, சொர்ணபுரி அருகில் உள்ள கே.ஜே.எஸ். ஜூவல்லரி ஷோரூமில் புதிய விசேஷா புட்டிக் ஜூவல்லரி கேவரி திறப்பு விழா நடைபெற்றது. புதிய கே.ஜே.எஸ். விசேஷா புட்டிக் ஜூவல்லரி உரிமையாளர்கள் கோபி, ஆனந்த் மற்றும் விஜய் ஆகியோர் கூறியதாவது:- சேலம் மக்களின் நன்மதிப்பை பெற்ற கே.ஜே.எஸ். ஜூவல்லரியின் புதிய அறிமுகமாக விசேஷா புட்டிக் கேலரி தொடங்கியுள்ளோம்.
இதில் புதுமையான, நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஆன்ட்டிக், டெம்பிள் (100சதவீத மற்றும் 18 கேரட், ரோஸ் கோல்ட் நகை கலெக்சன்களை அறிமுகப்படுத்தி உள்ளோம். இது அனைத்து நகை பிரியர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும். திறப்பு விழா சலுகையாக வாடிக்கையாளர்கள் வாங்கும் 22 கேரட் தங்க நகைகளின் எடைக்கு நிகராக வெள்ளி நாணயம் இலவசமாக வழங்கப்படும்.
தங்க நகைகளின் சேதாரத்தில் 20 சதவீத தள்ளுபடி மற்றும் வைர நகைகளுக்கு கேரட்டுக்கு ரூ.15 ஆயிரம் சிறப்பு தள்ளுபடி வழங்குகிறோம். இந்த சலுகை எங்களது சொர்ணபுரி கே.ஜே.எஸ்.ஜூவல்லரி ஷோரூமில் வருகிற 22-ந்தேதி வரை மட்டுமே வழங்குகிறோம் என்று தெரிவித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கே.ஜே.எஸ். ஜூவல்லரி நிர்வாகத்தினர் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.