கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பழைய நுழைவு கட்டணம்
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சிக்கு உயர்த்தப்பட்ட நுழைவு கட்டணம் மாற்றப்பட்டு,பழைய நுழைவு கட்டணமே இன்று முதல் அமுல்படுத்தப்படுகிறது.
Update: 2024-05-28 01:12 GMT
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கடந்த 17ஆம் தேதி 61-வது மலர் கண்காட்சி துவங்கப்பட்டது, இந்த மலர் கண்காட்சியானது 10 நாட்கள் நடைபெற்றது, மலர் கண்காட்சியை முன்னிட்டு பெரியவர்களுக்கு நுழைவு கட்டணம் 75 ரூபாய் என்றும் சிறியவர்களுக்கு 35 ரூபாய் கட்டணம் என்ற விகிதத்தில் பூங்கா நிர்வாகத்தினரால் வசூல் செய்யப்பட்டது,இதனையடுத்து நேற்றுடன் மலர் கண்காட்சி முடிவடைந்த நிலையில் இன்று முதல் பழைய முறை நுழைவு கட்டணத்தை பூங்கா நிர்வாகம் நடைமுறைப்படுத்தியுள்ளது பெரியவர்கள் ஒருவருக்கு 30 ரூபாய் என்றும் சிறியவர்களுக்கு 15 ரூபாய் எனவும் மாற்றம் செய்து வசூல் செய்யப்படுகிறது, இதனையடுத்து மலர் கண்காட்சி முடிந்தும் சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் பூங்காவில் பூத்துள்ள வண்ண வண்ண மலர்களை கண்டு ரசித்து புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.