கொடைக்கானல்: மலர் கண்காட்சியில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு

கொடைக்கானலில் பாண்டா கரடி,டிராகன்,கொரிலா,வரையாடு உள்ளிட்ட உருவங்கள் காய்கறிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-18 16:24 GMT

கொடைக்கானல் பூங்கா

  திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 61-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா நேற்று துவங்கியது, 2-வது நாள் மலர் கண்காட்சியில் இன்று சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது, மேலும் கொடைக்கானலில் மிதமான வெப்பம்,அவ்வப்போது தவழ்ந்து செல்லும் மேக கூட்டங்கள் என குளுமையான கால நிலை நிலவுவகிறது.

இதனையடுத்து கொரிலா,டிராகன், பாண்டா கரடி,வரையாடு,கொக்கு,வாத்து,மீன் உள்ளிட்ட உருவங்கள் காய்கறிகளால் தத்துரூபமாக வடிவமைக்கப்பட்டு இருப்பதையும்,சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது மதுரை என தர்பூசணியில் அச்சிடப்பட்டுள்ளது,வீனை, ஓலை சுவடிகள் உள்ளிட்டவைகள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன,இதனை சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்,மேலும் மயில்,சேவல்,வீடு,பொம்மை உள்ளிட்ட உருவங்கள் கொய் மலர்களால் உருவாக்கப்பட்டதையும்,அரங்கில் வைக்கப்பட்டுள்ள அலங்கார செடிகளையும் சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் கண்டு செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

மேலும் இதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலாப்பயணிகள் ஆடி,பாடி மலர்கண்காட்சியை கண்டு ரசித்து வருகின்றனர்.

Tags:    

Similar News