கொடைக்கானல் : வெள்ளி நீர் வீழ்ச்சியில் நீர் வரத்து அதிகரிப்பு

கொடைக்கானலில் நீண்ட நாட்களுக்கு பிறகு வெள்ளிநீர் வீழ்ச்சியில் நீர் வரத்து அதிகரித்ததால் சாரலில் நனைந்தவாறு நீர்வீழ்ச்சியை கண்டு ரசித்து செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து சுற்றுலாப்பயணிகள் மகிழ்ந்தனர்.

Update: 2024-05-14 04:48 GMT

வெள்ளி நீர்வீழ்ச்சி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் பிற்பகல் வேளை முதல் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக இடைவெளி விட்டு விட்டு ஒரு சில இடங்களில் கன மழையாகவும்,ஒரு சில இடங்களில் சாரல் மழையாகவும் பெய்து வருகிறது, இந்நிலையில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ள வெள்ளி நீர் வீழ்ச்சி அருவியில் கடந்த சில மாதங்களாக தண்ணீர் குறைந்து காணப்பட்ட நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று பெய்த மழையால் வெள்ளி நீர் வீழ்ச்சி அருவியில் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனையடுத்து அருவிக்கு வந்த சுற்றுலாப்பயணிகள் மழையில் நனைந்தபடி அருவியை கண்டு ரசித்ததுடன்,செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர், தற்போது பெய்து வரும் மழையால் குடிநீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருவதும் குறிப்பிட்டத்தக்கது.
Tags:    

Similar News