கொடைக்கானல்: ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம்

கொடைக்கானல் பேத்துப்பாறை கிராமத்தில் உலா வரும் ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Update: 2024-07-01 06:34 GMT

வீதிகளில் நடமாடிய காட்டு யானை 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளாக பேத்துப்பாறை, பாரதி அண்ணாநகர்,அஞ்சு வீடு,புலியூர், கோம்பைக்காடு உள்ளிட்ட கிராம பகுதிகள் உள்ளன,இந்த பகுதிகளில் முக்கிய தொழிலாக விவசாயம் செய்யப்பட்டு வருகிறது, இந்நிலையில் இப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே காட்டு யானைகள் முகாமிட்டு விவசாய நிலங்களை சேதப்படுத்துவதுடன்,விளை பயிர்களையும் சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது.

இந்நிலையில் இப்பகுதியில் முகாமிட்டுள்ள ஒற்றை காட்டு நேற்று அதிகாலை வேளையில் பேத்துப்பாறை வீதிகளில் உலா வந்தது, இதனால் அதிகாலையில் அன்றாட பணிகளுக்கு செல்லும் கிராமத்து பொதுமக்கள் மற்றும் விவசாய பணிகளுக்கு செல்லும் விவசாயிகள் அச்சமடைந்து வீடுகளிலேயே சிறிது நேரம் முடங்கினர், இதனை வனத்துறையினர் கவனம் செலுத்தி இந்த பகுதிகளில் முகாமிட்டு வரும் காட்டு யானையை அடர்ந்த வன பகுதிக்குள் நிரந்தரமாக விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களிடையே வேண்டுக்கோள் எழுந்துள்ளது.

Tags:    

Similar News