கொல்லிமலை: தனியார் தொலைக்காட்சி சேனல் செய்தியாளருக்கு நினைவேந்தல் நிகழ்வு!

இந்த நினைவேந்தல் நிகழ்வில் எம். நாடு தொலைக்காட்சியில் நிர்வாக இயக்குனர் காணுப்பிரியன் அவர்கள் விஜயகாந்தின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.

Update: 2024-07-13 10:13 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நாமக்கல் மாவட்ட எம். நாடு தொலைக்காட்சியின் மாவட்ட செய்தியாளராக பணியாற்றி வந்த கொல்லிமலையை சேர்ந்த விஜயகாந்த்(40) அவர்கள் கடந்த மாதம் 27 ஆம் தேதி உடல்நிலை குறைவால் உயிரிழந்தார்.

உயிரிழந்த செய்தியாளர் விஜயகாந்த்க்கு எம். நாடு தொலைக்காட்சியின் சார்பாகவும், பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பாகவும், நினைவேந்தல் நிகழ்ச்சி கொல்லிமலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் எம். நாடு தொலைக்காட்சியில் நிர்வாக இயக்குனர் காணுப்பிரியன் அவர்கள் விஜயகாந்தின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.

எம்.நாடு தொலைக்காட்சியில் செய்திப் பிரிவு ஆசிரியர் பாலு மற்றும் தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் மேற்கு மாவட்ட செயலாளர் ஏவிஎம் சரவணன், கரூர் மாவட்ட செயலாளர் வேலுச்சாமி, நாமக்கல் மாவட்ட செயலாளர் பிரபு,நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் ராஜலிங்கம் மற்றும் கரூர் மாவட்ட செய்தியாளர்கள், நாமக்கல் மாவட்ட செய்தியாளர்கள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மேலும் தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் சார்பாகவும் நாமக்கல் மாவட்ட செய்தியாளர்கள் சார்பாகவும் உயிரிழந்த செய்தியாளர் விஜயகாந்தின் குடும்பத்திற்கு உதவும் பொருட்டு நிதி உதவி வழங்கப்பட்டது.

பின்பு நினைவேந்தல் நிகழ்வில் பேசிய எம். நாடு தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் காணுப்பிரியன் உயிரிழந்த செய்தியாளர் விஜயகாந்தின் குடும்பத்திற்கு எம். நாடு தொலைக்காட்சியின் சார்பாக தொடர்ந்து உதவிகள் செய்யப்படும் எனவும், அரசின் சார்பில் அவர்கள் குடும்பத்திற்கு தேவையான சட்ட ரீதியான உதவிகள் பெற்றுத்தரப்படும் எனவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News