கோட்டைமேட்டுப்பட்டி ஓம்சக்தி ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோவில் தீர்த்தகுட ஊர்வலம்
சேலம் மாவட்டம் பூலாவரியில் அமைந்துள்ள அருள்மிகு ஓம் சக்தி ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு தீர்த்தகுட ஊர்வலம் நடைபெற்றது.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள கோட்டைமேட்டுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பூலாவரி ஏரி கோடியில் அமைந்திருக்கும் அருள்மிகு ஓம் சக்தி ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த ஜனவரி 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை விக்னேஸ்வர பூஜை, கால்கோள் நடுதல் மற்றும் முளைப்பாலிகை இடுதல் உள்ளிட்ட சுப நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.
தொடர்ந்து காலை 8 மணிக்கு விநாயகர் வழிபாடு மகா கணபதி ஹோமம் உள்ளிட்ட நிகழ்ச்சியை தொடர்ந்து தீர்த்தகுட ஊர்வலம் நடைபெற்றது. இந்த தீர்தகுட ஊர்வலம் கோட்டமேட்டுப்பட்டி மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு முக்கிய சாலைகள் வழியாக ஓம் சக்தி ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது.இதில் தீதகுட ஊர்வலத்துக்கு முன் பசுமாடுகள்,செண்டை மேளம் முழங்க பல பெண்களுக்கு அருள் வந்து ஆடிய படி கோவிலை வந்தடைந்தனர்.
பின்னர் கோவில் வளாகத்தில் புனித நீர் ஏந்தி வந்த தீர்த்த குடத்தை வைத்து சாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் கோட்டமேட்டுப்பட்டி அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.