நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாட்டம்
நாமக்கல் கீரம்பூரில் உள்ள தி நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் இன்று 23.08.2024 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
காக்கும் தெய்வம் என்று அழைக்கப்படும் “இந்த உலகத்தில் எப்போதெல்லாம் அதர்மம் தலைதூக்குகிறகோ அப்போதெல்லாம் மகாவிஷ்ணு அவதரிப்பார்” அவருடைய தச அவதாரங்களில் குறிப்பிடத்தக்க ஒன்று கிருஷ்ண அவதாரம். அந்த நாளையே நாம் இன்று கிருஷ்ண ஜெயந்தி என்று கொண்டாடுகின்றோம்.
அதன் நினைவாக நவோதயா பள்ளியில் குழந்தைச் செல்வங்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இராதையாகவும்ரூபவ் கிருஷ்ணராகவும் மிக அழகாக கண்ணைக் கவரும் வண்ணம் வேடமணிந்து வந்திருந்தனர். பள்ளியில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் அனைவரும் கலந்துகொண்டனர். பூஜையில் கலந்துகொண்ட “பள்ளியின் பொருளாளர் தேனருவி பேசும் போது குழந்தைகள் கடவுளின் அவதாரம் போன்றவர்கள் அவர்களின் மனதில் அறச்சிந்தனையையும், ஒழுக்கத்தையும் தவறு செய்வோரை தண்டிக்கும் பண்பையும் நாம் வளர்க்கவேண்டும் என்று கூறினார்” பள்ளியின் செயலாளர் திரு தனபால் அவர்கள் அனைத்து ஆசிரியர்களுக்கும் வேடமணிந்த குழந்தைகளுக்கும் இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
நிகழ்சியில் நிறைவாக பள்ளியின் முதல்வர் ஆண்டனி ராஜ் குழந்தைகளை சிறப்பாக வேடமணிந்து அனுப்பி வைத்த பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், இருபால் குழந்தைச்செல்வங்களுக்கும் நன்றி கூறி வாழ்த்தினார்கள்.
அனைத்து குழந்தைகளும் நவோதயா நந்தவன பசுமைத் தோட்டத்தின் ஆயர்பாடியில் ஆடிப்பாடிமகிழ்ந்து மாலை 3.00 மணிக்கு வீட்டிற்குச்சென்றனர்.