தொழில் கடனுக்கான ஆலோசனை- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் இணைந்து நடத்தும் மகளிருக்கான தொழில் கடன் முகாமில் தொழில்கடன் குறித்த ஆலோசனை வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-02-07 07:13 GMT
மாவட்ட ஆட்சியர் கே எம் சரயு அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் இணைந்து நடத்தும் மகளிருக்கான தொழில் கடன் முகாம் பருகூர் கன்கார்டியா மேல்நிலைப்பள்ளியில் 10. 02. 2024 சனிக்கிழமை அன்று காலை 9. 30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நடைப்பெற உள்ளது. இந்த சிறப்பு முகாமில் மகளிருக்கான தொழில் கடன் வழங்குதல், தொழில் கடனுக்கான ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.

மேலும், பல்வேறு துறைகளின் சார்பாக வழங்கப்படும் அரசு சலுகைகள் பற்றியும் ஆலோசனை வழங்கப்பட உள்ளது. இம்முகாமில் மகளிர் திட்டம், கிருஷ்ணகிரி வாழ்ந்து காட்டுவோம் திட்டம், மாவட்ட தொழில் மையம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, முன்னோடி வங்கி, கூட்டுறவுத்துறை, சமூக நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, தாட்கோ, ஆவின், மாவட்ட வேலைவாய்ப்புமற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் போன்ற அலுவலங்களை சார்ந்த அலுவலர்கள் இதில் கலந்து கொண்டு மகளிருக்கான அனைத்து தொழில் சார்ந்த கடன் உதவிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்க உள்ளனர்.

இதில் கலந்து கொள்பவர்கள் தங்களின் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதி சான்றிதழ் மாற்றுச் சான்றிதழ், வங்கி புத்தகம் மற்றும் சுயதொழில் குறித்தான திட்ட அறிக்கை ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம். சரயு இ. ஆ. ப. அவர்கள் தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News