வையப்பமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கிரிவலம்

மல்லசமுத்திரம் அருகே உள்ள வையப்பமலை மலைகுன்றின் மீது அமர்ந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை மற்றும் கிரிவலம் நடந்தது.

Update: 2023-12-27 08:48 GMT

மல்லசமுத்திரம் அருகே உள்ள வையப்பமலை மலைகுன்றின் மீது அமர்ந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை மற்றும் கிரிவலம் நடந்தது.

நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் அருகேயுள்ள, வையப்பமலை மலைக்குன்றின்மீது உள்ள, பிரசித்த பெற்ற மலைக்குன்றின்மீது அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் நேற்று, மார்கழிமாத பவுர்ணமி தினத்தை முன்னிட்டு, பகல் 12;30மணிக்கு மூலவருக்கு பால், தயிர், இளநீர் மற்றும் எண்ணற்ற மூலிகை திரவியங்களை கொண்டு, சிறப்பு அபிசேக ஆராதனை மற்றும் சத்து சம்ஹார திரிசதி பூஜை நடந்தது. 12;30மணிக்கு, மலையின் ஒருபகுதியில் அமைந்துள்ள கொங்கணசித்தர் குகையில் உச்சிகாலபூஜை நடந்தது.

மாலை 6மணிக்கு, அடிவார மண்டபத்தில் உள்ள ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்து, தொடர்ந்து, கிரிவலம் நடந்தது. இரவு 8 மணிக்கு, மலைகுன்றின்மீதுள்ள முருகனுக்கு சிறப்பு அபிசேகம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News