கேடிஎம் பைக் திருட்டு: காவல்துறை வழக்கு பதிவு

வீட்டின் முன்பு நிறுத்திய கேடிஎம் பைக்கை களவாடிய மர்ம நபர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

Update: 2024-03-15 14:23 GMT

கரூர் மாவட்டம், வெங்கமேடு, ஜோதிட தெருவை சேர்ந்தவர் ராஜா மகன் ஹரிஷ் பெரியசாமி வயது 19. இவருக்கு சொந்தமான கேடிஎம் பைக்கை பிப்ரவரி 25ஆம் தேதி இரவு 10 மணியளவில் அவரது வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு உறங்க சென்று விட்டார். பின்னர் மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது அவரது கேடிஎம் பைக் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவரது பைக் குறித்து அக்கம் பக்கத்தாரிடமும், அந்த தெருவில் வசிப்பவரிடமும் விசாரித்துள்ளார்.

ஆயினும் அவரது கேடிஎம் பைக் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கப்பெறவில்லை. இதனால், தனது டூவீலரான கே டி எம் மாயமானது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், நிறுத்தி இருந்த டூவீலரை இரவு நேரத்தில் களவாடிய மர்ம நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? தற்போது அந்த டூவீலர் எங்கே உள்ளது? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெங்கமேடு காவல்துறையினர்.

Tags:    

Similar News