தூய்மை காவலர்களுக்கு பாராட்டு!

மாப்பிள்ளையூரணியில் வெயிலையும் பொருட்படுத்தாமல் பணி புரிந்து வரும் தூய்மை காவலர்களுக்கு அறுசுவை விருந்துடன் உபகரணங்கள் வழங்கி பாராட்டு விழா நடத்தினர்.;

Update: 2024-05-14 07:35 GMT
தூய்மை காவலர்களுக்கு பாராட்டு!

மாப்பிள்ளையூரணியில் வெயிலையும் பொருட்படுத்தாமல் பணி புரிந்து வரும் தூய்மை காவலர்களுக்கு அறுசுவை விருந்துடன் உபகரணங்கள் வழங்கி பாராட்டு விழா நடத்தினர்.


  • whatsapp icon
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி கிராம ஊராட்சியில் தூய்மைக் காவலர்கள் மூலம் குப்பை அகற்றும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் திறம்பட செயல்படுத்தப் பட்டுவருகிறது. ஊராட்சி பகுதியில் உள்ள 150 குடும்பங்களுக்கு ஒரு பணியாளர் என்ற வகையில் தூய்மைக் காவலர்கள் மூலம் குப்பை அகற்றும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அக்னி நட்சத்திரம், சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பொறுப்புடன் சிறப்புமிக்க பணி செய்து வரும் அவர்களை பாராட்டினர். தூய்மை பணியாளர்களுக்கு அறுசுவை விருந்துடன் பணி பாதுகாப்பு உபகரணங்கள், முககவசம், கையுறை, தொப்பி ஆகியவற்றை வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்வின் போது ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, இளைஞர் அணி கௌதம் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News