விசிக மாநாட்டை சிறப்பாக நடத்திய பெரம்பலூர் மாவட்டசெயலாளருக்கு பாராட்டு
விசிக மாநாட்டை சிறப்பாக நடத்தியதற்காக பெரம்பலூர் மாவட்ட செயலாளருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-05 10:08 GMT
மாவட்ட செயலாளரை பாராட்டிய திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அதன் தலைவர் திருமாவளவன் தலைமையில் ஜனவரி 26 ஆம் தேதி வெல்லும் ஜனநாயகம் மாநாடு திருச்சி அருகே சிறுகனூர் பகுதியில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டிற்கான சிறப்பு ஏற்பாடுகளை செய்த பெரம்பலூர் மேற்கு மாவட்ட செயலாளர் ரத்தினவேலுக்கு, விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள விசிக கட்சி அலுவலகத்தில் நேரில் அழைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்வின் போது கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.