கீழே கடந்த 50,000 பணத்தை எஸ்பியிடம் ஒப்படைத்த மருந்தாளுனருக்கு பாராட்டு
பெரம்பலூரில் கீழே கடந்த 50,000 பணத்தை எஸ்பியிடம் ஒப்படைத்த மருந்தாளுனருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-07 09:02 GMT
பணத்தை ஒப்படைத்தவருக்கு பாராட்டு
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பள்ளிவாசலுக்கு அருகே ரூபாய் 50,000 பணம் கீழே கடந்ததை கண்ட தனியார் மருந்தக மருந்தாளராக பணிபுரியும் பெரம்பலூர் மாவட்டம் கவுல் பாளையம் கிராமத்தை சேர்ந்த சூர்யா என்ற இளைஞர் பணத்தை எடுத்து நேற்று மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளாதேவி இடம் ஒப்படைத்தார்.
கீழே கடந்த ரூபாய் 50000 பணத்தை நேர்மையாக காவல்துறையிடம் ஒப்படைத்த இளைஞரின் நற்செயலை சிறப்பிக்க மாவட்ட எஸ்பி தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.