தனியார் மெட்ரிக் பள்ளி விருதாளர்களுக்கு பாராட்டு!

பரதக்கலையில் சாதனையாளர் விருதுபெற்ற பள்ளியின் நடன ஆசிரியர் மற்றும் மாணவிக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.

Update: 2024-03-21 03:15 GMT

பரதக்கலையில் சாதனையாளர் விருதுபெற்ற பள்ளியின் நடன ஆசிரியர் மற்றும் மாணவிக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.


பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பரதக்கலையில் சாதனையாளர் விருதுபெற்ற பள்ளியின் நடன ஆசிரியர் மற்றும் மாணவிக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. அரியலூரில் காவேரி கலை பண்பாட்டு மையம் சார்பில், இசைக்கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. விழாவில், பரதக்கலையில் சிறந்த மாணவிகளை உருவாக்கிய இப்பள்ளியின நடன ஆசிரியை லலிதா பிரகாஷிற்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இதேபோல் இப்பள்ளியின் மாணவி பிரதீபாவின் நடன சாதனையைப் பாராட்டி இளம் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. விருது பெற்றவர்களுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில், பள்ளியின் தாளாளரும், முதல்வருமான ச.ம. மரியபுஷ்பம் விருதுபெற்ற ஆசிரியை லலிதா பிரகாஷ், மாணவி பிரதீபா ஆகியோரைப் பாராட்டி கௌரவித்தார். விழாவில் பள்ளி துணைமுதல்வர் இரா. பிரின்ஸ், ஆசிரியர் பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
Tags:    

Similar News