திமுக சார்பில் பொதுத் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
திருத்துறைப்பூண்டி திமுக நகரக் கழகம் சார்பில் பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த 96 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.;
Update: 2024-06-02 06:20 GMT
பரிசுகள்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தனியார் திருமண அரங்கில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை போற்றும் வகையில் திருத்துறைப்பூண்டி நகர திமுக சார்பில் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா தனியார் திருமண அரங்கில் திமுக நகர செயலாளர் ஆர் எஸ் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்கள் பிடித்த 18 பள்ளியை சேர்ந்த 96 மாணவ மாணவிகளுக்கு திமுக நகர கழகம் சார்பில் பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டப்பட்டது.