மழை வெள்ளத்தில் பாடுபட்ட தன்னார்வலர்களுக்கு பாராட்டு

செய்துங்கநல்லூர் அருகில் உள்ள ஆறாம்பண்ணை பஞ்சாயத்தில் மழை வெள்ளத்தில் பாடுபட்ட தன்னார்வலர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.;

Update: 2024-03-14 07:13 GMT
மழை வெள்ளத்தில் பாடுபட்ட தன்னார்வலர்களுக்கு பாராட்டு

செய்துங்கநல்லூர் அருகில் உள்ள ஆறாம்பண்ணை பஞ்சாயத்தில் மழை வெள்ளத்தில் பாடுபட்ட தன்னார்வலர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

  • whatsapp icon

தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் அருகே ஆறாம்பண்ணை பள்ளிவாசல் மண்டபத்தில் நடந்த இந்த விழாவிற்கு பஞ்சாயத்து தலைவர் சேக் அப்துல் காதர் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் அரவிந்தன் முன்னிலை வகித்தார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வரவேற்றார். கருங்குளம் ஒன்றிய பெருந்தலைவர் கோமதி ராஜேந்திரன் தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

இதில் மழை வெள்ளத்தில் மக்களை காப்பாற்ற போராடியவர்கள். வெளிஇடத்தில் இருந்து ஆறாம்பண்ணை கிராமத்துக்கு உணவு மற்றும் உடமைகள் கொண்டு வந்து உதவியவர்கள். படகு மூலம் மக்களை மீட்டவர்கள். மின் இணைப்பு, குடிதண்ணீர் இணைப்பு விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்தவர்கள். மருத்துவ உதவி செய்தவர்கள். உள்ளூர் செய்திகளை வெளியிட்டு சமூக விழிப்புணர்வு ஏற்படுத்திய பத்திரிக்கையாளர்கள் உள்பட பலர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். சிறப்பு அழைப்பளாராக பாளை சதக்கப்துல்லா அப்பா கல்லூரி முதல்வர் அப்துல் காதர், துணை முதல்வர் செய்யது முகமது காஜா ஆகியோர் கலந்து கொண்டனர். கவுன்சிலர் மைமுன் அப்துல் கரீம் நன்றி கூறினார்.

Tags:    

Similar News