குடுமியான்மலை அகிலாண்டேஸ்வரி கோயில் தெப்ப திருவிழா!

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு குடுமியான்மலை அகிலாண்டேஸ்வரி கோயிலில் தெப்ப திருவிழா நடந்தது.

Update: 2024-03-26 04:09 GMT

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு குடுமியான்மலை அகிலாண்டேஸ்வரி கோயில் தெப்ப திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.  புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே ஏழாம் நூற்றாண்டு கட்டப்பட்ட  பழமை வாய்ந்த அகிலாண்டேஸ்வரி சமேத  சிகாகிரீஸ்வரர் கோயில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கடந்த 16ஆம் தேதி காப்பு கட்டுகளுடன் திருவிழா தொடங்கியது.

பத்தாம் நாளான நேற்று தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 11ஆம் நாளான இன்று தெப்ப திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்தத் தெப்ப திருவிழாவில் வயலோகம், உருவம் பட்டி, மருங்கி பட்டி , பரம்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த  பொதுமக்கள் தேர் திருவிழாவில் பங்கேற்று  சுவாமி தரிசனம் செய்தனர். இந்த தெப்ப திருவிழாவில் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் பலரும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Tags:    

Similar News