சிவசுப்பிரமணியசாமி கோவிலில் திருஞானசம்பந்தர் குருபூஜை
குமாரசாமிபேட்டை அருள்மிகு சிவசுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் திருஞானசம்பந்தர் குருபூஜை விழா நடைபெற்றது
Update: 2024-05-26 02:21 GMT
தர்மபுரி மாவட்டம் தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட குமாரசாமிப்பேட்டை பகுதியில் எழுந்தருளி உள்ள அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ சிவகாம சுந்தரி சமேத ஸ்ரீ மத் ஆனந்த நடராஜர் சபையில் திருஞானசம்பந்தர் பெருமான் குருபூஜை வைபவத்தை முன்னிட்டு நேற்று மாலை 5.30 மணியளவில் நால்வர் திருமேனிக்கு திருநீராட்டல் அதனை தொடர்ந்து ஆளுடைய பிள்ளை சுவர்ண வர்ண மண்டபத்தில் எழுந்தருளி திருவீதி உலாவும் இரவு 8 மணியளவில் ஆனந்த நடராஜ பெருமானுக்கும் ஞானசம்பந்த பெருமானுக்கும் சோடச உபசாரம்,வேத பாராயணம், பஞ்ச புராண பாராயணம் மஹா தீபாராதனை வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் இதற்கான ஏற்பாட்டினை இந்து சமய அறநிலைத்துறையினர் மற்றும் செங்குந்தர் சமூகத்தினர் செய்திருந்தனர்.