குமரி சிஎஸ்ஐ டயோசியஸ் தேர்தல்;. செயலாளராக பைஜூ நிசித் பால் தேர்வு

குமரி சிஎஸ்ஐ டயோசியஸ் தேர்தலில் செயலாளராக பைஜூ நிசித் பால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Update: 2024-06-16 05:05 GMT

குமரி சிஎஸ்ஐ டயோசியஸ் தேர்தலில் செயலாளராக பைஜூ நிசித் பால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


கன்னியாகுமாரி சிஎஸ்ஐ பேராயத்தின் 2024 - 27 ஆம் ஆண்டுக்கான மாமன்ற தேர்தல் கடந்த 13ஆம் தேதி தொடங்கி நடந்தது. நாகர்கோவில் ஸ்கார்ட் கிறிஸ்தவ கல்லூரி நூற்றாண்டு அரங்கில் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.       இந்த தேர்தலில் இன்ஜினியர் பைஜு நிசித் பால்,  டாக்டர் முத்துசாமி கிறிஸ்துதாஸ், டாக்டர் பிரவீன் ஆகியோர் தலைமையில் ஒரு அணியும், இன்ஜினியர் அசோகன் சாலமன், கிறிஸ்டியன் பாபு, டாக்டர் ஜெயகர் ஜோசப் ஆகியோர் ஒரு அணியாகவும் மேலும் டாக்டர் ஜெயலால், டாக்டர் தம்பி விஜயகுமார், தங்கராஜ்  ஆகியோர் கொண்ட ஒரு அணி என மூன்று அணிகள் போட்டியிட்டன.      

ஹைகோர்ட் நியமனம் செய்துள்ள முன்னாள் மாவட்ட நீதிபதி ஜான் ஆர் டி சந்தோஷம், சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி ஜோதிமணி ஆகியவர்களால்  தேர்தல் நடத்தப்பட்டது.      நேற்று மாலை முதலில் பொருளாளருக்கான தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் கிறிஸ்டியன் பாபு அணியை சேர்ந்த ஜெயகர் ஜோசப் வெற்றி பெற்றார். தொடர்ந்து அறிவிக்கப்பட்ட முடிவுகளின் படி பைஜூ நிசித் பால் வெற்றி பெற்று செயலாளராக தேர்வு பெற்றார். உதவி தலைவராக பைஜு  நிசித் பால் அணியில் போட்டியிட்ட முத்துசாமி கிறிஸ்துதாஸ் வெற்றி பெற்றார்.       வெற்றி பெற்றவர்களுக்கு சபை உறுப்பினர்கள் சால்வை  அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News