நாகர்கோவிலில் குமரி கிழக்கு மாவட்ட அதிமுக கூட்டம்
Update: 2023-11-14 08:09 GMT
அதிமுக ஆலோசனை கூட்டம்
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. அவைத்தலைவர் சேவியர் மனோகரன் தலைமை தாங்கினார். குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. விற்குட்பட்ட கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் பூத் வாரியாக பூத் கமிட்டியினை ஏற்கனவே கூறியபடி விரைவாக அமைத்து, பூத் கமிட்டி புத்தகத்தினை வருகிற 18-ந்தேதிக் குள் கட்சி தலைமைக்கு சமர்ப்பிப்பது, குமரி மாவட்ட பத்திரப்பதிவில் நிலத்திற்குரியவர்கள் 1 சென்ட் நிலத்தை கூட விற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. ஒரு வார காலத்திற்குள் இதற்கு தீர்வு காணப்படவில்லை என்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களையும், பொது மக்களையும் திரட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது. தோவாளையில் கட்டப்பட்டு வரும் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை மணிமண்டப பணிகளை விரைவில் முடிப்பதற்கு அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அமைப்பு செயலாளர் பச்சைமால், உட்பட பலர் கலந்துகொண்டனர்