நாகர்கோவிலில் குமரி கிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம்

நாகர்கோவிலில் குமரி கிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது

Update: 2024-05-24 06:41 GMT

நாகர்கோவிலில் குமரி கிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாநிலம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நேற்று மாலையில் நாகர்கோவில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட அவை தலைவர் ராஜரத்தினம் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மேயர் மகேஷ் சிறப்புரையாற்றினார். 

அப்போது அவர் கூறியதாவது:-    குமரி கிழக்கு மாவட்டத்துக்குட்பட்ட குளச்சல், கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை படித்த 170 மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.      

மேலும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் 30 தலைமை ஆசிரியர்களுக்கும், 180 ஆசிரியர்களுக்கும் விருது வழங்கப்படுகிறது. ஜூன் முதல் வாரத்தில் மிகப் பெரும் விழாவாக இவை நடைபெறும். இதன் மூலம் அரசு பள்ளிகள் ஊக்குவிக்கப்படும்.    

  மேலும் கலைஞர் பிறந்த நாளை ஒட்டி மாவட்டம் முழுவதும் அணிகள் சார்பில் ஏழைகள், முதியோர், மாணவர்களுக்கு நலத்திட்டங்கள், கலை போட்டிகள்  மற்றும் உதவி தொகைகள் வழங்கவும், ரத்த தானம் செய்யவும்  முடிவு செய்யப்பட்டுள்ளது. என கூறினார்.  இந்த கூட்டத்தில் மாநில தணிக்கை குழு உறுப்பினர் சுரேஷ் ராஜன், மாநில மகளிர் அணிச் செயலாளர் ஹெலன் டேவிட்சன், மாவட்ட பொருளாளர் கேட்சன், மாநில மாவட்ட  நிர்வாகிகள் உட்பட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News