ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா

பெரம்பலூர் மாவட்டம் நெய்க்குப்பை கிராமத்தில் ஸ்ரீ திரௌபதி அம்மன், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ எல்லையம்மன் ரேணுகாதேவி, ஸ்ரீ நல்அரவான் ஆலய மஹ கும்பாபிஷேகம் வெகு விமா்சையாக நடைபெற்றது .

Update: 2024-06-16 13:59 GMT

கும்பாபிஷேகம்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், நெய்க்குப்பை கிராமத்தில் உள்ள, மிகவும் பழமையும் புராதான வரலாறும் கொண்ட ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ திரௌபதி அம்மன், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ எல்லையம்மன் ரேணுகாதேவி, ஸ்ரீ நல்அரவான் ஆகிய திருக்கோவில்கள் உள்ளன, இக் கோவில்கள் பல ஆண்டுக்கு பின் புனரமைக்கும் பணிகள் நடைபெற்றன.

இப்பணிகள் முடிவடைந்து அதற்கான குப்பாபிஷேக நிகழ்ச்சி, ஜூன் - 12ம் தேதி பந்த கால் ஊன்றி காப்பு கட்டுதலுடன் தொடங்கிய நிகழ்ச்சியை தொடர்ந்து ஜூன் - 15ம் தேதி கணபதி ஹோமம்,வாஸ்து சாந்தியுடன் மகாயாகம் தொடங்கி நடைபெற்றது இதனை தொடர்ந்து மூன்று கால பூஜைகள் முடிந்த பிறகு ஜூன் 16ஆம் தேதி காலை பத்து முப்பது மணி அளவில் திருமங்கல இசையுடன் திருமுறை பாராயணம் மகா பூர்ண ஹீதி முடிந்து யாகசாலையில் இருந்து கடங்கல் புறப்பட்டு கோபுர கலசம் கொண்டுவரப்பட்டது.

அங்கு கோபுரகலசத்திற்கு சிறப்பு பூஜைகள் தொடர்ந்து புனித தீர்த்தம் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது, இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் மீது நவீன முறையில் ட்ரோன் மூலம் பூக்கள் தூவி,புனித நீர் தெளிக்கப்பட்டது, இதனைத் தொடர்ந்து ஸ்ரீதிரெளபதி, அம்மன் ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீஎல்லையம்மன், ஸ்ரீரேணுகாதேவி, மற்றும் ஸ்ரீ நல் அரவான், ஸ்ரீ செல்வ விநாயகருக்கு புனித நீர் ஊற்றி மகா தீபாராதனை நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து சென்றனர்.

இதற்கான பூஜைகளை முத்து சுந்தர் சிவாச்சாரியார், கோகுல் ஐயங்கார் ஆகியோர் செய்தனர், விழா ஏற்பாடுகளை நெய்க்குப்பை கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

Tags:    

Similar News