சேலம் அருகே ராதா கிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேகம்
சேலம் அருகே புதிதாக கட்டப்பட்ட ராதா கிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-28 14:58 GMT
கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டவர்கள்
சேலம் சூரமங்கலம் திருவாக்கவுண்டனூர் மேத்தா நகரில் ராதா கிருஷ்ணர், சீனிவாசபெருமாள் கோவில் கட்டப்பட்டன. இதையடுத்து கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்படி முன்னதாக திருமுறை முற்றோதுதல், யாக வேள்வி ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர். கும்பாபிகேஷகத்திற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் சித்தாந்த மகராஜா மற்றும் சிவக்குமார், கிருஷ்ணகுமார், தாஸ், கோவில் தலைமை அறங்காவலர் கேசவன், அறங்காவலர்கள் ரவிக்குமார், ஆர்.சிவக்குமார், பண்டரிநாதன், சண்முகம், நடராஜன், ராமலிங்கம், சீனிவாசன், ராஜன், தீனதயாளன், கே.சிவக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.