புனரமைக்கப்பட்ட செல்வ விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா

கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சியில் புனரமைக்கப்பட்ட செல்வ விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

Update: 2024-02-15 07:26 GMT

புனரமைக்கப்பட்ட செல்வ விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா. கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சியில் உள்ள செல்வ நகர், லட்சுமண நகர், அமுதா நகர் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ செந்தில் ஆண்டவர், ஸ்ரீ முனியப்ப சாமி மற்றும் பரிவார தெய்வங்கள் அமர்ந்து அருள் பாலித்து வரும் திருக்கோவிலை புனரமைத்து, இன்று மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாக வேள்விகள் நடத்தி, மந்திரங்களை உச்சாடனம் செய்து, புனித நீரை எடுத்துச் சென்று கோவில் கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேக விழாவை சிவாச்சாரியார்கள் வெகு சிறப்பாக நடத்தினர். இந்த விழா ஊர் கொத்துக்காரர் வேலுச்சாமி கவுண்டர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புலியூர் பேரூராட்சி பத்தாவது வார்டு கவுன்சிலர் ஆனந்தன், முன்னாள் கவுன்சிலர் பெருமாள் மற்றும் ஊர் பொதுமக்கள், பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை சிறப்பித்தனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News