அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம்

அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இன்று பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2024-02-01 08:18 GMT

அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடை பெற்றது.    

   கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மையாகக் கொண்டதும் சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற திருத்தலமாக விளங்கும் கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது. இதற்காக கடந்த திங்கட்கிழமை79 குண்டங்கள் நூறு சிவாச்சாரியார்கள் கொண்டு வேள்வி யாகம் தொடங்கியது.  இதை தொடர்ந்து இன்று அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் கொடிமரம், மற்றும் பரிவார தெய்வங்களான கனக சபை, பாலதண்டாயுதபாணி, 63 நாயன்மார்கள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் தீர்த்த கலசங்கள் புறப்பாடு நடைபெற்று, கும்பாபிஷேகம் நடைபெற்றது.      

இதே போல நாராசா வீதியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலிலும் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.  இதில் பக்தர்கள் கலந்து கொண்டுசாமி தரிசனம் செய்தனர்.       தொடர்ந்து நாளை காலை 9.15 - 10.15 மணிக்கு அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் ராஜகோபுரங்கள், அவிநாசிலிங்கேஸ்வரர் சன்னதி, கருணாம்பிகையம்மன் சன்னதி மற்றும் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமண்யர் சன்னதி ஆகியவற்றிற்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.     நாளை நடைபெறும் கும்பாபிஷேகத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.       

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News