திருத்தணி தணிகாசலம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா
திருத்தணி அக்கைய்யநாயுடு சாலையில் உள்ள தணிகாசலம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
Update: 2024-03-25 14:34 GMT
திருத்தணி அக்கைய்யநாயுடு சாலையில் உள்ள தணிகாசலம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேம் ஒட்டி கோவில் வளாகத்தில் மூன்று யாகசாலைகள், 108 கலசங்கள் வைத்து, கடந்த, 22ம் தேதி கணபதி மற்றும் நவகிரக ஹோமத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜையும் மாலை, 6:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜைகள் நடந்தது. நேற்று காலை, 8:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகள் அவப்ருத யாகம், மஹா பூர்ணாஹூதி நடந்தது. காலை, 9:30 மணிக்கு கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு கோவில் விமானம் மற்றும் மூலவர் அம்மன் மீது புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு உற்சவர் அம்மன் திருவீதியுலா நடந்தது.