வானூர் அருகே கும்பாபிஷேக விழா

மொரட்டாண்டி பகுதியில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திரளாந பக்தர்கள் பங்கேற்றனர்.

Update: 2024-06-17 03:33 GMT

கும்பாபிஷேகம்

விழுப்புரம் மாவட்டம்,வானுார் அடுத்த மொரட்டாண்டி அம்மச்சார் அம்மன் கோவில் வளாகத்தில் ஸ்ரீவிநாயகர், தட்சணாமூர்த்தி, துர்க்கை, முனீஸ்வரன் ஆகிய சன்னதிகளும் உள்ளன.இக்கோவில் திருப்பணிகள் முடிவடைந்து, கடந்த 16ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிேஷக விழா துவங்கியது.நேற்று காலை 4:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜையும், 7:15 மணிக்கு, அம்மச்சார் அம்மனுக்கு மகா கும்பாபிேஷகமும், 7:30 மணிக்கு மூலவர் கும்பாபிேஷகமும் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

விழாவில், நாவற்குளம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் பத்மநாபன், மொரட்டாண்டி பிரத்தியங்கிரா கோவில் ஜனார்த்தனன், சக்கரபாணி எம்.எல்.ஏ., வானுார் ஒன்றிய சேர்மன் உஷா முரளி, திருச்சிற்றம்பலம் ஊராட்சி தலைவர் வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர் காமாட்சி விஜயரங்கன், ரிஷி அறக்கட்டளை நிறுவனர் விஜயரங்கன், வள்ளி, கார்த்திகேயன், சதீஷ்குமார், பாலாஜி, நவநீதிகிருஷ்ணன், பெருமாள் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை முன்னாள் ஊராட்சி தலைவர் பூங்காவனம் சக்திவேல், விழாக்குழுவினர்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக ஓய்வு பெற்ற கண்காணிப்பாளர் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News